ஷார்ஜாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 46வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் பவுலிங் தேர்வு செய்தது. இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் மற்றும் நித்திஷ் ராணா இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.
பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே நித்திஷ் ராணா அவுட்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து ஷமியின் இரண்டாவது ஓவரில் ராகுல் திரிபாதியும், தினேஷ் கார்த்திக்கும் அவுட்டாகி வெளியேறினர். 10 ரன்களுக்கு கொல்கத்தா மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.
பின்னர் கேப்டன் மோர்கனும், கில்லும் 81 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் சீரான இடைவெளியில் கொல்கத்தா விக்கெட்டுகளை இழந்தது. இருபது ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை கொல்கத்தா எடுத்தது. கில் 57 ரன்கள் விளாசினார்.
பஞ்சாப்புக்காக அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து பஞ்சாப் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.