இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் மிதாலி ராஜ், 34 ரன்கள் எடுத்த போது இந்த சாதனையைப் படைத்தார். 183ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள அவர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5,992 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து வீராங்கனை சார்லோட் எட்வர்ட்ஸின் சாதனையை முறியடித்தார். மிதாலி 6 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் அடக்கம்.
டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த கோலி, பேஸ்புக்கில் மிதாலிக்கு பதில் பூனம் விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இது இணையதளத்தில் வைரலானது. பின்னர், அந்தப் புகைப்படத்தில் இருப்பது மிதாலி அல்ல பூனம் என்று பலர் சுட்டிக்காட்டியது கோலிக்கு தெரியவந்தது. சிலர் கோலியை கலாயத்து கமென்ட் போட்டிருந்தனர். இதையடுத்து அந்தப் பதிவை நீக்கினார் கோலி.