விளையாட்டு
அதிக வரி செலுத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார்? யாருக்கு முதலிடம்?
அதிக வரி செலுத்தும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
2024 நிதியாண்டில், 66 கோடி ரூபாய் வரியை விராட் கோலி செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 38 கோடி ரூபாய் வரி செலுத்தி மகேந்திர சிங் தோனி இரண்டாவது இடத்திலும், 28 கோடி ரூபாய் வரி செலுத்தி சச்சின் டெண்டுல்கர் மூன்றாவது இடத்திலும், 23 கோடி ரூபாய் செலுத்தி சவுரவ் கங்குலி நான்காவது இடத்திலும், 13 கோடி ரூபாய் செலுத்தி ஹர்திக் பாண்டியா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் கோலியும், ஆறாவது இடத்தில் தோனியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா, அதிக வரி செலுத்தும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் முதல் 20 இடங்களில் கூட இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.