அப்பாடா, பெங்களூருக்கு முதல் வெற்றி: உள்ளூரில் பஞ்சாப்புக்கு முதல் தோல்வி!

அப்பாடா, பெங்களூருக்கு முதல் வெற்றி: உள்ளூரில் பஞ்சாப்புக்கு முதல் தோல்வி!
அப்பாடா, பெங்களூருக்கு முதல் வெற்றி: உள்ளூரில் பஞ்சாப்புக்கு முதல் தோல்வி!
Published on

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி, நடப்புத் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஐபில் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மொகாலியில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் மற்றும் கெய்ல் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 15 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த அகர்வால் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் தலா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும், கெய்ல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 20 ஓவர் முடிவில், பஞ்சாப் அணி, 4 விக்கெட் டுகள் இழப்பிற்கு 173 ரன் சேர்த்தது. கெய்ல் 64 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களுரு தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 174 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பெங்களுரு அணி, கேப்டன் விராத் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 19.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் 38 பந்தில் 59 ரன்னும் ஸ்டோயினிஸ் 16 பந்தில் 28 ரன்னும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். விராத் கோலி 67 ரன் எடுத்தார்.

(விராத் கோலியுடன் பஞ்சாப் அணியின் பிரீத்தி ஜிந்தா)

இந்த தொடரில் தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த பெங்களூரு அணி பெற்ற முதல் வெற்றி இது. பஞ்சாப் அணிக்கு இது நான்காவது தோல்வி. நடப்புத் தொடரில் உள்ளூரில் பஞ்சாப் சந்தித்த முதல் தோல்வியும் இதுதான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com