அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 லீக் போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் கெவின் கொத்திகோடா தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஸ்டைலால் பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட் உலகில் வித்தியாசமான பும்ரா வரை பல பவுலர்கள் வித்தியாசமான பவுலிங் ஆக்ஷனை கொண்டவர்கள். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம். இடக்கை சுழற்பந்துவீச்சாளரான பால் ஆடம்ஸ் வளைந்து வந்து வித்தியாசமான முறையில் பந்துவீசுவார். அவருக்கு பின்பு வித்தியாசமான ஸ்டைலில் பந்துவீசுபவர்கள் கிரிக்கெட் உலகில் வராமல் இருந்தனர்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Not long now till we see some more of this magnificence in the T10 ... <a href="https://t.co/9EmOBFuNOW">pic.twitter.com/9EmOBFuNOW</a></p>— Paul Radley (@PaulRadley) <a href="https://twitter.com/PaulRadley/status/1356579817857175552?ref_src=twsrc%5Etfw">February 2, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இப்போது பால் ஆடம்ஸ் இடது கை சுழற்பந்துவீச்சாளர். அவரது பவுலிங் போல அப்படியே வலது கை பவுலிங் ஸ்டைலில் பிரபலிக்கிறார் கெவின். இப்போது அபுதாபி டி10 தொடரில் விளையாடி வரும் கெவினின் பவுலிங்கால் பேட்ஸ்மேன்கள் திணறிதான் வருகின்றனர். அவரின் வித்தியாசமான பவுலிங் ஸ்டைல் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.