சல்மான் கானா? அல்லது தோனியா யார் சூப்பர் ஸ்டார் என்பது குறித்து கேதார் ஜாதவ் இன்ஸ்டா உரையாடலின் போது கருத்து கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ். இவர் இன்ஸ்டாகிராமில் நேற்று நேரலை உரையாடினார். அப்போது பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஆகியோர் தனக்குப் பிடித்த "சூப்பர் ஸ்டார்" எனக் குறிப்பிட்டார். மேலும் அந்த உரையாடலின் போது கேதார் ஜாதவ், தனக்கு சல்மான் கானை பார்க்கும் வாய்ப்பு எம்.எஸ்.தோனியால்தான் கிடைத்தது என்றும் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து ஜாதவ், "என்னைப் பொறுத்தவரை இருவரும் சூப்பர்ஸ்டார்கள்தான். ஆகவே என்னால் வேறுபடுத்திப் பார்க்க முடிவில்லை. தன்னால் இந்த அளவுக்கு விளையாட முடிந்ததற்கு எம்.எஸ்.தோனி காரணம் என்றார். தொடர்ந்து அவர் உரையாடிய போது, அவரிடம் தோனி அல்லது சல்மான் யாரை அதிகம் பிடிக்கும் எனக் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ஜாதவ், "நீங்கள் பெற்றோரில் யாரை மிகவும் விரும்புகிறீர்கள்? உங்களுக்கு அம்மாவை பிடிக்குமா? அல்லது உங்கள் அப்பாவைப் பிடிக்குமா? என கேட்டால் அதற்குப் பதில் கொடுப்பது எனக்கு மிகவும் கடினம்” என்று ஜாதவ் கூறினார்.
சச்சின் குறித்த கேள்விக்கு, “நாட்டில் உள்ள பெரும்பாலான ரசிகர்களைப் போலவே, சச்சின் டெண்டுல்கரைப் பார்த்தான் வளர்ந்தேன். இந்திய கிரிக்கெட்டின் லெஜண்ட் அவர். ஆனால் அவருடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்ளாததற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்காததற்காக வருத்தப்படுகிறேன்” என ஜாதவ் வெளிப்படையாகப் பேசினார்.
"கிட்டத்தட்ட 99% சச்சின் டெண்டுல்கரை பார்த்துதான் வளர்கிறார்கள். ஆனால் அவருடன் இந்தியாவிற்காக ஈனைந்து என்னால் விளையாட முடியவில்லை என்பதற்காக நான் எப்போதும் வருந்துகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார். மேற்கொண்டு அவர், "நான் மஹி பாயைச் (தோனி) சந்தித்தபோது, அவர் இந்திய அணியின் கேப்டன். அவர் மிகவும் கண்டிப்பானவர். அவர் மிகவும் அமைதியானவர் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் அவர் மிகவும் கூர்ந்து கவனிப்பவர் என்பது எனக்குத்தான் தெரியும். ”என்று ஜாதவ் கூறியுள்ளார்.