நியூசி. கேப்டன் வில்லியம்சன் மருத்துவமனையில் அனுமதி!

நியூசி. கேப்டன் வில்லியம்சன் மருத்துவமனையில் அனுமதி!
நியூசி. கேப்டன் வில்லியம்சன் மருத்துவமனையில் அனுமதி!
Published on

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நியூசிலாந்து அணி, பங்களாதேஷ் அணியுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. முதல் இரண்டு நாள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது நாள் போட்டி தொடங்கியது. பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸில் 211 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ராஸ் டெய்லர் இரட்டை சதம் அடித்தார்.

இந்தப் போட்டியில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்தை தடுக்கும்போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதனால் அவர் பேட்டிங் செய்யும்போது வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக் கு ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. காயத்தின் தீவிரம் பற்றி மருத்துவர்கள் ஏதும் தெரிவிக்கவில்லை. 

இதனால் பங்களாதேஷ் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும்போது அவர் களத்துக்கு வரவில்லை. ‘’அவர் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாகத்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை’’ என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com