அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீரர் ஜஸ்டின் கேட்லின் தமது பயிற்சியாளர் டெனிஸ் மிச்செலை நீக்கியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீரர் ஜஸ்டின் கேட்லின். லண்டனில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அதிவேக ஓட்டப்பந்தைய வீரரான உசைன் போல்டை தோற்கடித்து தங்கம் வென்றவர். கேட்லின் ஊக்கமருத்து பயன்படுத்தியதாக கடந்த 2006 முதல் 2010 வரை போட்டிகளில் பங்கேற்க அவருக்கு தடைவிதிக்கப்பட்டது. தடைக்கு பின் மீண்டு வந்து அவர் தங்கம் வென்றார். இவர் டெனிஸ் மிச்செலை தனது பயிற்சியாளராக நியமித்திருந்தார்.
இந்நிலையில் எந்த சோதனையிலும் சிக்காதபடியிலான ஊக்கிகளை வீரர்களுக்கு வழங்க முடியும் என மிச்செல் தெரிவித்துள்ள காணொளிக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. பிரிட்டனைச் சேர்ந்த டெலிகிராஃப் பத்திரிக்கை நடத்திய ரகசிய ஆய்வின் போது மிச்செல் இதனைத் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து ஊக்க மருந்து பிரச்னையில் மிச்செல் சிக்கியதையடுத்து ஜஸ்டின் கேட்லின் அவரை நீக்கியுள்ளார். இந்த செய்தி தமக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ஜஸ்டின் கேட்லின் தெரிவித்துள்ளார்.