ஆஸிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஜாஸ் பட்லர் கிடையாது : காரணம் இதுதான்!!

ஆஸிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஜாஸ் பட்லர் கிடையாது : காரணம் இதுதான்!!
ஆஸிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஜாஸ் பட்லர் கிடையாது : காரணம் இதுதான்!!
Published on

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஜாஸ் பட்லர் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்தத் தொடரை இங்கிலாந்து வெல்வதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர். முதல் டி20 போட்டியில் 44 ரன்கள் எடுத்த பட்லர், நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் 77 ரன்கள் விளாசினார். இறுதி வரை ஆட்டமிழக்காத அவர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் அவர் 3வது டி20 போட்டியில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. எனவே அவர் பயோ-பாதுகாப்பு வளையத்திலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. இதனால் பட்லர் தனது குடும்பத்துடன் அடுத்த சில நாட்களை செலவிட உள்ளார்.

பயோ-பாதுகாப்பு வளையம் என்பது கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க கொண்டு வரப்பட்டிருக்கும் தற்காலிக முறையாகும். இந்த முறைப்படி போட்டிக்குப் பின்னர் ஒரு கிரிக்கெட் வீரர் மற்ற வீரர்களுடனோ அல்லது வேறு யாருடனோ தொடர்பில் இல்லாமல் தனித்து இருப்பார்கள். இதன்மூலம் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரவல் இல்லாமல் கட்டுப்படுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com