மும்பையை வெளுத்து வாங்கி சதமடித்த ஜோஸ் பட்லர் - இரண்டாவது வெற்றியை பதிவுசெய்யுமா RR?

மும்பையை வெளுத்து வாங்கி சதமடித்த ஜோஸ் பட்லர் - இரண்டாவது வெற்றியை பதிவுசெய்யுமா RR?
மும்பையை வெளுத்து வாங்கி சதமடித்த ஜோஸ் பட்லர் - இரண்டாவது வெற்றியை பதிவுசெய்யுமா RR?
Published on

ஜோஸ் பட்லரின் சதத்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 194 ரன்களை, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

கடந்த 26-ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் 15-வது சீசன் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 9-வது லீக் போட்டியான இன்றைய முதல் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகிச் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக, ஜோஸ் பட்லர் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஆனால், ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடிய நிலையில், மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் ஒரு ரன்கள் எடுத்திருந்தபோது, 2.4 ஓவரில், பும்ராவின் பந்துவீச்சில் டிம் டேவிட்டிடம் கேட்ச் ஆகி, தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல்லும் 7 ரன்களில் ஆட்டமிழக்க, பட்லருடன் கூட்டணி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 30 ரன்கள் எடுத்தநிலையில், பொல்லார்டு பந்துவீச்சில் சஞ்சு சாம்சன் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய ஹெட்மயரும அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டானார். தொடர்ந்து மற்ற வீரர்கள் சொதப்பியநிலையில், ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி சதமடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்.

எனினும் கடைசி 3 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி பவுலர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியுள்ளது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று, வெற்றிகரமான அணியாக வலம் வரும் மும்பை அணிக்கு, இந்தாண்டு தொடக்கமும் பின்னடைவாகவே இருந்தது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. இதனையடுத்து 2-வது போட்டியிலாவது வெற்றி கணக்கை தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் மும்பை அணி களமிறங்கியுள்ளது. ராஜஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் ஐதராபாத்தை 61 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனால் மும்பை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் களமிறங்கியுள்ளது.

மும்பை அணி 3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com