‘இரண்டு முறை கொரோனா டெஸ்ட் எடுத்துட்டு வாங்க’ அப்படி என்னதான் செய்தார் ஆர்ச்சர்?

‘இரண்டு முறை கொரோனா டெஸ்ட் எடுத்துட்டு வாங்க’ அப்படி என்னதான் செய்தார் ஆர்ச்சர்?
‘இரண்டு முறை கொரோனா டெஸ்ட் எடுத்துட்டு வாங்க’ அப்படி என்னதான் செய்தார் ஆர்ச்சர்?
Published on

கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இன்று நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே உயிர் பாதுகாப்பு சூழலுக்கு (Biosecurity bubble) நடுவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணி வீரர்களும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் கடும் கட்டுப்பாடுகளுடன் விதிகளை பின்பற்றி ஆடி வருகின்றனர். முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மான்சஸ்டரில் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இங்கிலாந்து அணியிலிருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விதிகளை மீறியதற்காக நீக்கப்பட்டுள்ளார். இப்போது ஜோப்ரா ஆர்ச்சர் 5 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவரது தனிமை காலத்துக்குள் 2 பரிசோதனைகளிலும் நெகெட்டிவ் என்று வந்தால்தான் ஜோப்ரா ஆர்ச்சர் இந்தத் தொடரில் நீடிக்க முடியும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் "நான் செய்த காரியத்துக்காக மிகவும் வருந்துகிறேன். நான் என்னை மட்டுமல்ல அணி, நிர்வாகம் அனைவரையுமே அபாயத்தில் ஆழ்த்தி விட்டேன். நான் இதன் விளைவுகளை முழுதும் ஏற்கிறேன். அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com