சச்சினின் ஜெர்சி எண்ணுக்கும் ஓய்வு: பிசிசிஐ முடிவு!

சச்சினின் ஜெர்சி எண்ணுக்கும் ஓய்வு: பிசிசிஐ முடிவு!
சச்சினின் ஜெர்சி எண்ணுக்கும் ஓய்வு: பிசிசிஐ முடிவு!
Published on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  சர்வதேச போட்டிகளில் இருந்து சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி எண்ணுக்கு ஓய்வு அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். உலக அரங்கில் வேண்டுமானால் இவருக்கு இப்படி அறிமுகம் கொடுக்கலாம் ஆனால் இந்திய ரசிகர்களுக்கு கிரிக்கெட் கடவுள். சச்சின் என்றால் பல்வேறு சாதனைகளை அடுக்கும் ரசிகர்கள் அவரது ஜெர்ஸி எண்ணையும் குறிப்பிட தவறுவதில்லை. அந்தளவு சச்சினின் ஜெர்சியில் பொறிக்கப்பட்டுள்ள 10ம் எண் ரசிகர்கள் மனதில் பதிந்த ஒன்று. சச்சினுக்கு ராசியான எண் என்பதால் ரசிகர்களுக்கு அது பிடித்த எண்ணானது. இந்த எண்ணால் தான் பிசிசிஐக்கு வந்தது சிக்கல்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்தியா - இலங்கைக்கு அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 10 எண் கொண்ட ஜெர்சியை அணிந்து ஷர்குல் தாக்குர் விளையாடினார். இதனை சச்சினின் ரசிகர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அந்த எண்ணை சச்சின் அணிந்து பார்த்த கண்களால், மற்றொரு வீரர் அணிவதை நினைத்து பார்க்கமுடியவில்லை. இதுதொடர்பாக பிசிசிஐக்கு பல்வேறு கண்டனங்கள், வேண்டுகோள்களை சச்சின் ரசிகர்கள் வைத்தனர். 

இதன்பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்ட தாக்குர், 54-ம் எண் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக இனி 10ம் எண் வேறு எந்த வீரருக்கு வழங்கப்படாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் 10ம் எண்ணை பயன்படுத்தலாம் என்றும் சர்வதேச போட்டிகளில் இந்த எண் வழங்கப்படாது என பிசிசிஐ வாய்மொழியாக தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. சச்சினுக்கு மரியாதை அளிக்கும் விதமாக வீரர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com