இந்திய பவுலர்களை புகழ்ந்த ஜேசன் கில்லெஸ்பி !

இந்திய பவுலர்களை புகழ்ந்த ஜேசன் கில்லெஸ்பி !
இந்திய பவுலர்களை புகழ்ந்த ஜேசன் கில்லெஸ்பி !
Published on

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முடித்த கையோடு விராட் கோலி தலைமையிலான 25 போ் கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியா வந்தடைந்தது.

வரும் 27-ஆம் தேதி ஒரு நாள் தொடா் தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து டிசம்பா் 4-ஆம் தேதி டி20 தொடா் தொடங்குகிறது. அதன்பிறகு டிசம்பா் 17-ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட் தொடா் தொடங்குகிறது. இந்தத் தொடா் ஜனவரி 20-ஆம் தேதி முடிவடைகிறது.

இந்திய வீரா்களுடன் ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரா்கள் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பட் கம்மின்ஸ் ஆகியோரும் சிட்னி நகரை வந்தடைந்தனா்.

ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர்  உள்ளிட்ட வேகப் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை மிரட்ட காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி இந்திய பவுலர்களை பாராட்டியுள்ளார். குறிப்பாக பும்ராவை புகழ்ந்து மெச்சியுள்ளார். ஸ்போர்ட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் ஜேசன் கில்லெஸ்பி கூறுகையில்,  

''வேகப்பந்து வீச்சில் பேட்ஸ்மேன்களை தாக்குவதற்கு அனைவரும் வெவ்வேறு வழிகளை கையாள்கிறார்கள். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முன்பிருந்ததைவிட இப்போது மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதற்காக முன்னாள் பவுலர்களை நான் குறைசொல்லவில்லை.

பும்ராவின் பவுலிங் அபாராமானது. கிரிக்கெட்டின் அனைத்து வடிவ போட்டிகளிலும் மிகச்சிறந்த ஒருவராக களமிறங்குவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.  முகமது ஷமி மிகச்சிறந்த பவுலர்.  அவர் எப்போதும் தன்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்.

புவனேஷ்வர் குமார் போன்ற மேலும் பல நல்ல பவுலர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள். இந்த நேரத்தில் அவர் காயமடைந்துள்ளார். அவர் விரைவில் தகுதி பெறுவார் என்று நம்புகிறேன்’’ என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com