முதலில் கெத்து ! கடைசியில் சொதப்பல் ! ஜப்பானின் தோல்வி

முதலில் கெத்து ! கடைசியில் சொதப்பல் ! ஜப்பானின் தோல்வி
முதலில் கெத்து ! கடைசியில் சொதப்பல் ! ஜப்பானின் தோல்வி
Published on

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் பெல்ஜியம் மற்றும் ஜப்பானை அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது. 21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.

இதில் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து, காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போது வரை ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், குரேஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்று முன்னேறியுள்ளன.

இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த பெல்ஜியம் மூன்று ஆட்டங்களிலும் வென்றது. எச் பிரிவில் இடம்பெற்றிருந்த ஜப்பான் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா செய்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றது. நேற்று நடைபெற்ற பெல்ஜியம் - ஜப்பான் இடையிலான நாக் அவுட் ஆட்டத்தில்  முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இதனையடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் ஹராகுச்சி கோலடிக்க ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது.

உடனே, 52 வது நிமிடத்தில் இனூய் கோலடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது. 69வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் வெடோன்கென் கோலடிக்க 2-1 என ஆனது. மேலும் 74வது நிமிடத்தில் பெலானி கோலடிக்க 2-2 என சமநிலை உருவானது. இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது முழு நேரமும் முடியும் நேரத்தில் பெல்ஜியத்தின் மியூனர் உதவியால் சாதல் கோலாக்கினார்.

இதனையடுத்து பெல்ஜியம் வெற்றிப்பெற்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றது. இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் கெத்தாக விளையாடிய ஜப்பான், கடைசியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com