அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் முதல் முறையாக கைப்பற்றியுள்ளார்.
இது அவருக்கு 2 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து கொண்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் பலப்பரீட்சை நடத்தினர். போட்டியின் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சின்னர், புள்ளிகளை குவிக்க தொடங்கினார்.
6க்கு 3, 6க்கு 4, 7க்கு 5 என நேர் செட்களில் வெற்றி பெற்ற ஜானிக் சின்னர், முதல் முறையாக அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார். நடப்பாண்டிலேயே 2 ஆவது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை அவர் வென்றுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய ஓபனிலும் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.