வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பிரபல வீரர் ஷிவ்நரைன் சந்தர்பாலும், அவரது மகன் டேக்நரைன் சந்தர்பாலும் அரைசதம் அடித்தனர்.
ஜமைக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கயானா அணிக்காக விளையாடும் அவ்விருவரும் அரைசதம் அடித்து ரசிகர்களை கவர்ந்தனர். இதன் காரணமாக கயானா அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. இந்தப்போட்டியில் சந்தர்பால் 58 ரன்களும் அவரது மகன் டேக்நரைன் 57 ரன்களும் குவித்தனர். தந்தையும் மகனும் அரைசதம் அடித்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து சந்தர்பால் நீக்கப்பட்டதிலிருந்து அவர் உள்ளுர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 21 ஆண்டுகளாக மேற்கிந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிவந்த சந்தர்பால் அணியிலிருந்து நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.