”எனக்கு அதுதான் பெரிய விஷயம்”- 25 மில்லியன்ஸ் ஃபாலோவர்ஸ்.. ஹர்திக்கின் நெகிழ்ச்சிப் பதிவு!

”எனக்கு அதுதான் பெரிய விஷயம்”- 25 மில்லியன்ஸ் ஃபாலோவர்ஸ்.. ஹர்திக்கின் நெகிழ்ச்சிப் பதிவு!
”எனக்கு அதுதான் பெரிய விஷயம்”- 25 மில்லியன்ஸ் ஃபாலோவர்ஸ்.. ஹர்திக்கின் நெகிழ்ச்சிப் பதிவு!
Published on

இன்ஸ்டாகிராமில் 25 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை எட்டியிருக்கும் ஹர்திக் பாண்டியா, இளம் வயதில் அதிகளவு பின் தொடர்பவர்களை கொண்டுள்ள முதல் வீரர் என்ற பெருமையை எட்டியுள்ளார்.

உலக விளையாட்டு நட்சத்திர வீரர்களான ரஃபேல் நடால், ரோஜர் பெடரர், மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மற்றும் எர்லிங் ஹாலண்ட் போன்ற நட்சத்திரங்களை விட ஹர்திக் பாண்டியாவை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.

பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா, சமீப காலத்தில் உலகின் சிறந்த வீரராக உருவெடுத்துள்ளது மட்டும் இல்லாமல், இந்திய கிரிக்கெட் அணிக்கு கோப்பையை வென்றுத்தர போகும் அடுத்த தலைமுறை கேப்டனாகவும் உருவெடுத்துள்ளார். அதற்கு ஒரு சான்றாக தான், தற்போது ஹர்திக் மீதுள்ள ரசிகர்களின் அபிமானத்தின் வெளிப்பாடாக, இந்த இன்ஸ்டாகிராம் எண்களின் எண்ணிக்கை நிரூபித்து காட்டியுள்ளன. மேலும் ஹர்திக் பாண்டியாவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையானது, சுவாரஸ்யமாக ரஃபேல் நடால், ரோஜர் பெடரர், மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மற்றும் எர்லிங் ஹாலண்ட் போன்ற உலகளாவிய நட்சத்திரங்களை விடவும் அதிகமாகியுள்ளதை பார்க்கும்போது, உலகளவில் ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் கவனத்தை எந்தளவு ஈர்த்திருக்கிறார் என்பதற்கு ஒரு சான்றாக மாறியிருக்கிறது.

25 மில்லியன் பின் தொடர்பவர்களை எட்டிய பிறகு, தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் ஹர்திக் பாண்டியா, "ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. எனது ஒவ்வொரு ரசிகர்களும் எனக்கு சிறப்பு வாய்ந்தவர்கள், இத்தனை ஆண்டுகளாக நீங்கள் காட்டிவரும் அன்புக்கும், ஆதரவுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

விளையாட்டாக இருந்தாலும் சரி, தன்னுடைய வாழ்க்கையாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலும் அவருடைய நிலையான ஈடுபாடு மற்றும் ஏற்றுக்கொண்ட விசயத்திற்காக அவருடைய முழுமனப்பாங்கான அர்ப்பணிப்பு எல்லாம், கிரிக்கெட்டையும் தாண்டி சமூக வலைதளங்களில் மட்டும் இல்லாமல், பொதுவெளியிலும் ரசிகர்களை அவருக்கு பலப்படுத்தியது. மேலும் அவர் தன்னுடைய ரசிகர்களிடம் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளார் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அவர் காயத்தினால் அவதியுற்று, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஒய்வில் இருந்த போதிலும், அவருக்கான இடமானது இந்திய அணியில் எவராலும் கைப்பற்றப்பட முடியாத இடமாகவே இருந்தது. அவர் தன்னுடைய காயத்திலிருந்து மீண்டு, மீண்டும் அணிக்குள் இடம்பிடித்து, தற்போது கேப்டனாக முன்னேற்றம் கண்டுள்ளதற்கு பின்னால், நிச்சயம் அவருடைய ரசிகர்களின் ஆதரவு பெரிதாகவே இருந்துள்ளது என்றால் மிகையாகாது.

29 வயதாகும் ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் மட்டுமல்லாமல், ஐபிஎல் தொடர்களிலும் அவருடைய ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் அறிமுக கேப்டனாக குஜராத் டைட்டன்ஸிற்கு பொறுப்பேற்று கொண்ட ஹர்திக், தன்னுடைய முதல் கேப்டன் தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தினார். ஒரு இளம் தலைவர், குடும்ப மனிதர், ஸ்டைலிஷ் கிரிக்கெட்டர், ஈகோ இல்லாத டீம் மேன், கிடைத்திருக்கும் ரோலிற்கு அர்ப்பணிப்பு மற்றும் காம்னஸ், தனித்துவம் என பன்முக திறமையோடு இருக்கும் ஒருவராக தன்னை ஹர்திக் பாண்டியா வெளிக்கொணர்ந்துள்ளது, பிராண்ட் உலகிற்கு ஒரு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பிராண்ட் உலகின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, ஹர்திக் பாண்டியாவின் மேம்பட்ட தெரிவுநிலை, கடினமான நேரத்திலும் அவர் நிகழ்த்தி காட்டிய வெற்றிக் கதையின் காரணமாக, பிராண்ட் உலகில் விளையாட்டு உபகரணங்கள், ஆடியோ, டெனிம்கள் மற்றும் சட்டைகள், பேட்டரிகள் மற்றும் லூப்ரிகண்டுகள், எனர்ஜி பானம், பிஸ்கட்கள், சாதாரண ஆடைகள், காலணிகள், பானம், வாசனை திரவியம், ஊடகம் மற்றும் ஒளிபரப்பு போன்ற பல்வேறு துறைகளில் 20க்கும் மேற்பட்ட பிராண்டுகளை அவருக்கு திறந்து வைத்திருக்கிறது. மேலும், சில பெரிய பிராண்டுகளுக்கு இவர் விரும்பப்படும் முகமாக இருப்பதால், அதிகளவு ஒப்பந்தம் செய்யப்படும் பிரபலங்களில் முக்கியமான ஒருவராக மாறியிருக்கிறார்.

தன்னுடைய மனைவியோடு 25 மில்லியன் ஃபோலோவர்ஸை கொண்டாடும் வகையில், 25 கேள்விகளுக்கு பதிலளித்திருக்கும் ஹர்திக் பாண்டியா, ” உங்கள் இன்ஸ்டாகிராமை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், என்ன கூறுவீர்கள் என கேட்டதற்கு, லவ், பேஷன் மற்றும் பேமிலி” என்று பதிலளித்தார்.

யாருடைய இன்ஸ்டா புரபைல் நன்றாகயிருக்கும்? என கேட்டதற்கு, பதில் - ஹர்திக் பாண்டியா

உங்களிடம் உங்களுக்கு பிடித்தது?, பதில்- பலபேர் பலவற்றை கூறுவார்கள், எனக்கு பிடித்தது என்னை தான்.

உங்கள் புரைபலில் பதிவிட்ட பேவரட் புகைப்படம் எது?, பதில்-எனது மகன் விரல்களை பற்றி முதன்முதலில் பகிர்ந்த புகைப்படம்.

ஃபேன் பேஜ்ஜஸ் வைத்திருக்கும் ரசிகர்களுக்கு உங்களுடைய பதில்?, உங்கள் அன்பிற்கு எப்போதும் நன்றி.

கிரிக்கெட் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய விசயம் என்ன?, பதில்- மக்களின் வாழ்த்துகள் மற்றும் அன்பு, அதற்கும் மேலாக எனது நாட்டுக்காக நான் விளையாடுவது தான் எனக்கு பெரிய விசயம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com