‘எனது கேப்டன்சி வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது அந்த சம்பவம் தான்’ ஸ்டீவ் வாஹ்

‘எனது கேப்டன்சி வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது அந்த சம்பவம் தான்’ ஸ்டீவ் வாஹ்
‘எனது கேப்டன்சி வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது அந்த சம்பவம் தான்’ ஸ்டீவ் வாஹ்
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் ஸ்டீவ் வாஹ்.

அவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி 57 டெஸ்ட் போட்டிகளில் 41 போட்டிகளை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை எளிதில் மற்ற அணிகளால் வெல்ல முடியாத அணியாக மாற்றியதும் ஸ்டீவ் தான்.

இந்நிலையில் தனது கேப்டன்சி வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த ஒரு சம்பவத்தை ஆஸ்திரேலிய ஊடக பேட்டியில் பகிர்ந்துள்ளார் அவர். 

‘நான் கேப்டனாக வந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை சமன் செய்துவிட்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தோம். இலங்கையுடனான முதல் போட்டியில் பந்தை கேட்ச் பிடிக்க முயன்றதில் நானும், பவுலர் கில்லெஸ்பியும் மோதிக் கொண்டதில் எனது மூக்கிலும், அவரது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அனைத்தும் எங்களது கையை மீறி சென்றதாக உணர்ந்தேன். அதை மீட்டெடுத்து வரும் தெம்பு என்னுள் உள்ளது என்ற நம்பிக்கை வந்தது. பின்னர் எனது அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டு வந்தேன். அதுவே எனது கேப்டன்சி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது’ என தெரிவித்துள்ளார் அவர். 

கடந்த 2004இல் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றார் ஸ்டீவ் வாஹ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com