”பாதி சீசன் முடிந்தபின் தோனி கேப்டன் பதவிக்கு திரும்பியது ஆச்சரியமாக உள்ளது” - டு பிளசிஸ்!

”பாதி சீசன் முடிந்தபின் தோனி கேப்டன் பதவிக்கு திரும்பியது ஆச்சரியமாக உள்ளது” - டு பிளசிஸ்!
”பாதி சீசன் முடிந்தபின் தோனி கேப்டன் பதவிக்கு திரும்பியது ஆச்சரியமாக உள்ளது” - டு பிளசிஸ்!
Published on

பாதி சீசன் முடிந்தபின் தோனி கேப்டன் பதவிக்கு திரும்பியது ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் சிஎஸ்கே வீரரும் தற்போது ஆர்சிபி அணியின் கேப்டனாகவும் உள்ள ஃபாஃப் டு பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதவுள்ளன. பத்தாண்டுகளாக சென்னை அணிக்காக கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் விளையாடிய ஃபாஃப் டு பிளசிஸ் இன்று அவரை எதிர்த்து ஆர்சிபி அணியை வழிநடத்த உள்ளார். மூன்று தொடர் தோல்விகளுக்கு பின் சென்னை அணியை எதிர்கொள்கிறது ஆர்சிபி!

ஐபிஎல் 2022 சீசனில் சென்னை அணியின் 8 போட்டிகளுக்குப் பிறகு தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டதாக சிஎஸ்கே அறிவித்தது. பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோற்கடித்ததால், பிளே-ஆஃப்களுக்குச் செல்வதற்கான நம்பிக்கையை உயிருடன் வைத்திருக்க தோனி உதவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி கேப்டனாக மீண்டும் பதவியேற்றது குறித்து பேசிய டு பிளசிஸ், “இந்த சீசனில் நடந்தது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சீசனின் தொடக்கத்தில் தோனி பதவி விலகியதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை விட சீசனின் பாதிப் போட்டிகள் முடிவடைந்த பின் அவர் மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்பியதும் ஆச்சரியமே” என்று கூறினார்.

மேலும் அவர் “வெளிப்படையாக, அங்கு எந்த ரகசியமும் இல்லை. தோனி இருக்கும் போது, அவர் கேப்டனாக இருக்கும் போது, அவர் சிறந்த வீரர்களை வெளிப்படுத்துவார் என்று நான் நினைக்கிறேன். இது CSK இன் வெற்றியின் பெரும் பகுதியாகும். இது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. நாங்கள் எச்சரிக்கையாக விளையாட வேண்டும்” என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com