முதல் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி போராடி தோல்வி

முதல் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி போராடி தோல்வி
முதல் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி போராடி தோல்வி
Published on

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் கோவா அணியுடனான இன்றைய ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி போராடி தோல்வி அடைந்தது.

கால்பந்து ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நான்காவது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கடந்த 17 ஆம் தேதி கொச்சியில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் எந்த அணியும் கோல் அடிக்காததால் போட்டி சமனில் முடிந்தது.

இந்நிலையில், சென்னையின் எஃப்சி தனது முதல் போட்டியில் கோவா அணியை இன்று எதிர்கொண்டது. இந்தப்போட்டி நேரு விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 3 கோல்கள் அடிக்க, சென்னையின் எஃப்சி அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் சென்னை வீரர்கள் கடுமையாக போராடினர். இரண்டாவது பாதியில் சென்னை அணி 2 கோல்கள் அடித்தது. கோவா அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இந்தப் போட்டியை காண ஏராளமான சென்னை ரசிகர்கள் குவிந்து இருந்தனர். சென்னை அணி தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com