’என்னது, பிரதமராகப் போறேனா?’ பங்களாதேஷ் கேப்டன் அதிர்ச்சி!

’என்னது, பிரதமராகப் போறேனா?’ பங்களாதேஷ் கேப்டன் அதிர்ச்சி!
’என்னது, பிரதமராகப் போறேனா?’ பங்களாதேஷ் கேப்டன் அதிர்ச்சி!
Published on

‘’இன்னும் பத்து வருடத்தில், உங்களை பிரதமராக பார்க்கலாமா?’’ என்ற கேள்வியை எதிர்கொண்ட, பங்களாதேஷ் கிரிக்கெட் கேப்டன் மோர்டாஸா அதிர்ச்சி அடைந்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா- பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.  உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன், பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்று நடக்கும் போட்டி யில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். 

பங்களாதேஷ் அணி, 3 வெற்றி, 3 தோல்வி மற்றும் 1 ஆட்டத்தில் முடிவில்லை என 7 புள்ளிகளுடன் இருக்கிறது. பங்களாதேஷ் அணி அரையிறுதிக்குள் நுழைய வேண்டும் என்றால் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும்.

இந்நிலையில் இந்தப் போட்டி பற்றி செய்தியாளர்களிடம் நேற்று பேசினார், பங்களாதேஷ் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாஸா. அவர் பங்களாதேஷின் எம்.பியாகவும் இருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவரிடம் செய்தியாளர் ஒருவர், ’’இன்னும் பத்து, பதினைந்து வருடத்தில் பங்களா தேஷின் பிரதமராக உங்களை பார்க்கலாமா?’’ என்று கேட்டார். இந்த கேள்வியை எதிர்பார்க்காத மோர்டாஸா, அதிர்ச்சி அடைந்தார். பின்னர், ‘ஏன், என்னை கொல்ல விரும்பறீங்களா?’’ என்று கிண்டலாகச் சொல்லி சிரித்தார். 

பின்னர் கிரிக்கெட் வீரர்களை சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பது பற்றி பேசிய அவர், ‘’நாங்களும் மனிதர்கள்தான். எல்லை தாண்டி வீரர் களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை எதிர்கொள்வது கடினமானது. கிரிக்கெட் வீரர்கள் அதை கண்டு கொள்ளாமல் தவிர்த்துவிட வேண்டும். இரண்டு நாட்டு அணிகள் மோதும்போது, இரு அணிகளுமே வெற்றி பெறுவதற்குத்தான் போராடும். ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவளிக்க வேண்டும். ஆனால் அது கண்ணியமற்றதாகி விடக் கூடாது’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com