''உங்களது 'வாய்மொழி வயிற்றுப்போக்கு' போதும்'' - மஞ்சரேகரை வார்த்தைகளால் விளாசிய ஜடேஜா!

''உங்களது 'வாய்மொழி வயிற்றுப்போக்கு' போதும்'' - மஞ்சரேகரை வார்த்தைகளால் விளாசிய ஜடேஜா!
''உங்களது 'வாய்மொழி வயிற்றுப்போக்கு' போதும்'' - மஞ்சரேகரை வார்த்தைகளால் விளாசிய ஜடேஜா!
Published on

வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேகரை இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களை வர்ணனையாளர்களாக அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேகர் இடம்பெற்றுள்ளார். போட்டியின் போது இவர் கூறும் கருத்துகள் பலமுறை விமர்சிக்கப்பட்டுள்ளன.

வர்ணனை என்ற பெயரில் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை வார்த்தைகளாக மஞ்சரேகர் வீசி வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஐபிஎல் தொடரிலும் மஞ்சரேகர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தோனி மீது வெறுப்பு வார்த்தைகளை வீசி தோனி ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் சிக்கலுக்கு உள்ளானார்.

இந்நிலையில் சில நாட்களாக ரசிகர்கள் பலர் பிசிசிஐ மற்றும் ஐசிசி க்கு மஞ்சரேகரை வர்ணனையாளர் இடத்தில் இருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா மஞ்சரேக்கரை கண்டித்து ட்வீட் செய்துள்ளார். ஜடேஜாவை அணியில் சேர்ப்பது குறித்து பேசிய மஞ்சரேக்கர், ஜடேஜாவை ''துண்டு துக்கடா வீரர்'' என குறிப்பிட்டார். மேலும் தான் கேப்டனாக இருந்தால் ஜடேஜாவை அணியில் சேர்க்கமாட்டேன் என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஜடேஜா, ''நீங்கள் விளையாடிய விளையாட்டை காட்டிலும் இரண்டு மடங்கு நான் விளையாடி விட்டேன். இன்னமும் விளையாடி வருகிறேன்

சாதனை செய்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களது 'வாய்மொழி வயிற்றுப்போக்கு' போதும். நிறுத்துங்கள்'' என கடுமையாக சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com