சென்னையில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் பாதுகாப்பு தேவை என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து ஐபிஎல் தலைவர், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் வீரர்களுக்கும், சென்னையில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு பதிலளித்த உள்துறை செயலர், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் உள்துறை செயலாளரை நேரில் சந்தித்து ஐபிஎல் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.