பத்தாவது ஐபிஎல் தொடருக்கான ஏலம் பெங்களூருவில் நடைப்பெற்றது.
பெங்களூருவில் நடைப்பெற்ற 10-ஆவது ஐபிஎல் சீசனுக்காக வீரர்கள் ஏலத்தில் 350 வீரர்கள் பங்கேற்றார்கள். இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்தில் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 27 வீரர்களை தங்கள் அணியில் வைத்துக் கொள்ளலாம் இந்த முறை வீரர்களுக்கான அடிப்படை விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இன்றைய ஏலத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ. 14.5 கோடிக்கு புனே அணி ஏலம் எடுத்துள்ளது. டாப் 10 வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜனை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 கோடிக்கு எடுத்துள்ளது.
டாப் 10 வீரர்கள் பட்டியல்:
பென் ஸ்டோக்ஸ் - ரூ 14.50 கோடி (புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ்)
டிமால் மில்ஸ் - ரூ 12 கோடி (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்)
ட்ரென்ட் போல்ட் - ரூ .5 கோடி(கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
ககிசோ ரபாடா - ரூ .5 கோடி (தில்லி டேர்டெவில்ஸ்)
பாட் கம்மின்ஸ் - ரூ 4.5 கோடி (தில்லி டேர்டெவில்ஸ்)
கிறிஸ் வோக்ஸ் - ரூ 4.2 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
ரஷீத் கான் - ரூ 4 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்)
நாதன் கோல்ட்டர் நைல் - ரூ 3.5 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
கரண் சர்மா - ரூ 3.2 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
டி நடராஜன் - 3 கோடி ரூபாய் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)