தோனி முதல் சாம் கரண் வரை.. ஒவ்வொரு சீசனிலும் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்

தோனி முதல் சாம் கரண் வரை.. ஒவ்வொரு சீசனிலும் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்
தோனி முதல் சாம் கரண் வரை.. ஒவ்வொரு சீசனிலும் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்
Published on

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே ஐபிஎல் 2023-ம் போட்டிக்கான மினி ஏலம் கொச்சியில் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் சாம் கரண் (ரூ.18.50 கோடி), கேமரூன் கிரீன் (ரூ.17.50 கோடி), பென் ஸ்டோக்ஸ் (ரூ.16.25 கோடி), நிக்கோலஸ் பூரண் (ரூ.16.00 கோடி), ஹாரி ப்ரூக் (ரூ.13.25 கோடி) ஆகியோர் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை நடந்த 16 சீசனுக்கான ஏலத்தில் எந்த வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளனர் என்று பார்க்கலாம்.

1. 2008: தோனி (சிஎஸ்கே) - ரூ. 9.5 கோடி

2. 2009: கெவின் பீட்டர்சன் (ஆர்சிபி), ஆண்ட்ரூ பிளிண்டாஃப் (சிஎஸ்கே) - ரூ. 9.8 கோடி

3. 2010: ஷேன் பாண்ட் (கேகேஆர்), கெய்ரன் பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்) - ரூ. 4.8 கோடி

4. 2011: கௌதம் கம்பீர் (கேகேஆர்) - ரூ. 14.9 கோடி

5. 2012: ரவீந்திரா ஜடேஜா (சிஎஸ்கே) - ரூ. 12.8 கோடி

6. 2013: கிளன் மேக்ஸ்வெல் (மும்பை) - ரூ. 6.3 கோடி

7. 2014: யுவராஜ் சிங் (ஆர்சிபி) - ரூ. 14 கோடி

8. 2015: யுவராஜ் சிங் (டெல்லி) - ரூ. 16 கோடி

9. 2016: ஷேன் வாட்சன் (ஆர்சிபி) - ரூ. 9.5 கோடி

10.2017: பென் ஸ்டோக்ஸ் (புனே) - ரூ. 14.5 கோடி

11. 2018: பென் ஸ்டோக்ஸ் (ஆர்ஆர்) - ரூ. 12.5 கோடி

12. 2019: ஜெயதேவ் உனாட்கட் (ஆர்ஆர்), வருண் சக்ரவர்த்தி (பஞ்சாப்) - ரூ. 8.4 கோடி

13. 2020: பேட் கம்மின்ஸ் (கேகேஆர்) - ரூ. 15.5 கோடி

14. 2021: கிறிஸ் மோரிஸ் (ஆர்ஆர்) - ரூ. 16.25 கோடி

15. 2022: இஷான் கிஷன் (மும்பை) - ரூ. 15.25 கோடி

16. 2023: சாம் கரண் (பஞ்சாப்) - ரூ. 18.50 கோடி

இதேபோல், அதிக விலைக்கு எடுக்கப்பட்ட டாப் 5 வீரர்களையும் பார்க்கலாம். 

1. சாம் கரண் (பஞ்சாப்) - ரூ. 18.50 கோடி (2023)

2. கேமரூன் கிரீன் (மும்பை) - ரூ. 17.5 கோடி (2023)

3. பென் ஸ்டோக்ஸ் (சிஎஸ்கே) - ரூ. 16.25 கோடி (2023) 

4. கிறிஸ் மோரிஸ் (ஆர்ஆர்) - ரூ. 16.25 கோடி (2021) 

5. நிக்கோலஸ் பூரன் (லக்னோ) - ரூ. 16.00 கோடி (2023) 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com