கேன் வில்லியம்சனை வாங்கியது குஜராத் அணி - ரூ. 13.50 கோடிக்கு ஏலம் போன இங். வீரர் ப்ரூக்!

கேன் வில்லியம்சனை வாங்கியது குஜராத் அணி - ரூ. 13.50 கோடிக்கு ஏலம் போன இங். வீரர் ப்ரூக்!
கேன் வில்லியம்சனை வாங்கியது குஜராத் அணி - ரூ. 13.50 கோடிக்கு ஏலம் போன இங். வீரர் ப்ரூக்!
Published on

தற்போது கொச்சியில் துவங்கியுள்ள மினி ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சம் வாங்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரை 2 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியுள்ளது.

2023-ம் ஆண்டுக்கான 16-வது சீசன் ஐபிஎல் போட்டி துவங்க இன்னும் 3 மாதங்களே உள்ளநிலையில், மினி ஐபிஎல் ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று துவங்கியுள்ளது. இதில், 10 அணிகளுக்கும் சேர்த்து 87 வீரர்களே தேவைப்படும் நிலையில், மொத்தம் 405 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்குபெற பதிவுசெய்துள்ளனர். தற்போது செட் 1 வீரர்கள் ஏலம் விடப்பட்ட நிலையில், 2 கோடி ரூபாய்க்கு நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சனை வாங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முன்னதாக சன்ரைசர்ஸ் அணியிலிருந்து கேன் வில்லியம்சம் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த அணி 13.25 கோடி ரூபாய்க்கு இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை வாங்கியுள்ளது. மேலும் 8.25 கோடி ரூபாய்க்கு இந்திய வீரர் மயங்க் அகர்வாலையும் வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுக்க 8 கோடி ரூபாய் வரை சென்னை அணி பங்கேற்றது. கடும் போட்டி நிலவிய நிலையில், அவரை இறுதியாக ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.

கடைசியில் சென்னை அணி 50 லட்சம் ரூபாய்க்கு இந்திய வீரர் ரஹானேவை வாங்கியது. செட் 1-ல் ஏலம் விடப்பட்ட தென்னாப்பிரிக்கா வீரர் ரைல் ரோசவ், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆகியோர் ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து செட் 2-விற்கான ஏலம் துவங்கியுள்ளது. இதில் முதலாவதாக வங்கேதேச வீரரும், அந்நாட்டின் டெஸ்ட் மற்றும் டி20 வடிவப் போட்டி கேப்டனுமான ஷகீப் அல் ஹசனை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரரும், முன்னாள் சென்னை கிங்ஸ் அணி வீரருமான சாம் கரண் ஏலத்தில் விடப்பட்டார். அவரை எடுக்க சென்னை அணி உள்பட பல அணிகளும் மோதின. ஏனெனில், தற்போது நடந்த டி20 உலகக் கோப்பையில், இங்கிலாந்து அணி கோப்பை அடிக்க அவர்தான் முக்கிய காரணமாக இருந்தார். 

15 கோடி ரூபாய் அவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி முற்பட்ட நிலையில், கடைசியாக 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி அவரை தட்டிதூக்கியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com