பொல்லார்டு கேட்சை தவறவிட்ட விஜய் சங்கர் - அந்த 17 ரன்கள் மும்பைக்கு சாதகமாக இருக்குமா?

பொல்லார்டு கேட்சை தவறவிட்ட விஜய் சங்கர் - அந்த 17 ரன்கள் மும்பைக்கு சாதகமாக இருக்குமா?
பொல்லார்டு கேட்சை தவறவிட்ட விஜய் சங்கர் - அந்த 17 ரன்கள் மும்பைக்கு சாதகமாக இருக்குமா?
Published on

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டி செய்ய தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் ரோகித் சர்மா, குயிண்டன் டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். டிகாக் நிதானமாக விளையாட ரோகித் அடித்து விளையாட முயற்சித்தார். இருப்பினும் ரோகித் சர்மா 25 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து விஜய் சங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் 10, இஷான் கிஷன் 12 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணியின் நேர்த்தியான பந்துவீச்சால் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். நிதானமாக விளையாடி வந்த டிகாக் 39 பந்துகளில் 40 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யாவும் 7 ரன்னில் நடையைக் கட்ட கடைசி நேரத்தில் பொல்லார்டு மட்டும் அதிரடி காட்டி 22 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அவர் 3 சிக்ஸர் விளாசினார். பொல்லார் ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்ஸர்களை கடந்துள்ளார். அவரது அதிரடியாக ஒரு வழியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எட்டியது.

ஹைதராபாத் அணி தரப்பில் விஜய் சங்கர், முஜீப் உர் ரஹ்மா தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். கலில் அகமது 4 ஓவரில் 24 ரன் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். ரஷித் கானும் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த 84 பந்துகளில் வெறும் 97 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது. பொல்லார்டுவின் கேட்சை விஜய் சங்கர் விட்டதால் அவர் கூடுதலாக 17 ரன்கள் எடுத்தார். இந்த ரன்கள் ஒருவேளை மும்பை அணியின் வெற்றிக்கு கூட உதவலாம்.

ஏற்கெனவே மும்பை 150 ரன்களுக்குள் எடுத்து எதிரணியை அதற்குள் கட்டுப்படுத்தியும் உள்ளது. அதனால் வெற்றி வாய்ப்பு இரு தரப்பினரும் உள்ளது. 151 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணியில் கேப்டன் வார்னர், பேரிஸ்டோவ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வர்னர் நிதானமாக விளையாட பேரிஸ்டோவ் வான வேடிக்கை காட்டினார். சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். 5 ஓவர்கள் முடிவிலே ஹைதராபாத் அணி 55 ரன்கள் எடுத்தது. பேரிஸ்டோவ் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 15 பந்துகளில் 40 ரன்கள் விளாசி இருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com