ஐபிஎல் 2020 : மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் 11... யார் யாருக்கு வாய்ப்பு?

ஐபிஎல் 2020 : மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் 11... யார் யாருக்கு வாய்ப்பு?
ஐபிஎல் 2020 : மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் 11... யார் யாருக்கு வாய்ப்பு?
Published on

அடுத்த 

 மணிகளில் ஆரம்பமாக உள்ள 2020க்கான ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் அந்தஸ்த்தோடு விளையாட உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி வழக்கம்போலவே இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றாக உள்ளது. 

கிறிஸ் லின், டிகாக், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ்,, இஷான் கிஷன், குர்ணால் பாண்டியா, பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, ரூதர்போர்ட் என மும்பை அணி பேட்ஸ்மேன்கள் ரன் வேட்டையாட உள்ளனர். 

பும்ரா, போல்ட், பட்டின்சன், கோல்டர் நைல், மெக்லிங்கன் என தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் மும்பை அணியில் உள்ளனர்.

சுழற்பந்து வீச்சில் குர்ணால் பாண்டியா, ராகுல் சஹார் மற்றும் ஜெயந்த் யாதவ் மட்டுமே உள்ளனர். இதில் மூன்றாவது ஆப்ஷனாக உள்ள ஜெயந்த் யாதவ் துபாயின் ஸ்லோ பிட்ச்களில் எப்படி செயல்படுவார் என்பதை பார்க்க வேண்டியுள்ளது.

மும்பை அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை வெளிநாட்டு வீரர்களில் டிகாக் மற்றும் பொல்லார்ட் ஆடுவது உறுதி. மீதமிருக்கும் இரண்டு இடங்களுக்கு ரோஹித் யாரை ஆட வைப்பது என யோசிக்கலாம். மலிங்காவுக்கு மாற்றாக போல்டை சேர்க்கலாம். அதே நேராத்தில் நான்காவதாக பேட்ஸ்மேனா அல்லது பவுலரா என ரோஹித்  யோசிக்க  வாய்ப்புகள் உள்ளன. பேட்ஸ்மேனை சேர்த்தால் இஷான் கிஷன் பெஞ்சில் உட்கார வேண்டியிருக்கும்.

நாளை நடைபெற உள்ள சென்னை அணியுடனான ஆட்டத்தில் டிகாக், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன்,  குர்ணால் பாண்டியா, பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, ராகுல் சஹார், பும்ரா, போல்ட், மெக்லிங்கன் அல்லது ஜெயந்த் யாதவ் ஆகிய வீரர்கள் விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

மும்பையின் பிளெயிங் லெவன் கூட்டணி ஜெயிக்கின்ற கூட்டணியாக அமைகிறதா என்பது நாளை தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com