துபாய் மைதானத்தில் நடைபெற்ற டெல்லி VS பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டம் சமனில் முடிந்தது.
ஆரம்பம் முதலே ஆட்டம் பஞ்சாப் அணியின் கண்ட்ரோலில் இருக்க அதை மெல்லமாக தங்கள் பக்கமாக திசை திருப்பியது டெல்லி.
‘இனி அவ்வளவு தான். டெல்லியின் கதை முடிந்தது’ என சொன்ன போதே ‘அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது’ என ஆறாவது மேட்ஸ்மேனாக டெல்லிக்காக களம் இறங்கிய ஸ்டாய்னிஸ் 21 பந்துகளில் 53 ரன்களை குவித்திருந்தார்.
அதன் மூலம் பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை டார்கெட் செய்திருந்தது.
சுலபமாக பஞ்சாப் சேஸ் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் பத்து ஓவர்களில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்திருந்தது.
டெல்லி இருந்த அதே நிலைக்கு பஞ்சாப்பும் தள்ளப்பட்டது.
ஓப்பனிங் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வாலின் ஆட்டம் மட்டும் ஆறுதலாக அமைந்தது. 60 பந்துகளில் 80 ரன்களை குவித்திருந்தார் அவர்.
இறுதி வரை விளையாடி டெல்லி அணிக்கு பிரெஷர் கொடுத்தார் மயங்க்.
கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட முதல் மூன்று பந்திலேயே சிக்ஸர், டூ மற்றும் பவுண்டரி அடித்து ஸ்கோரை சமன் செய்த மயங்க் ஐந்தாவது பந்தில் அவுட்டானார்.
மீதமுள்ள ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் போதும் என்ற நிலையில் ஸ்டாய்னிஸ் வீசிய பந்தில் பஞ்சாப்பின் ஜார்டன் சிங்கிள் எடுக்க முயன்ற போது கேட்ச் கொடுத்து அவுட்டானதால் மேட்ச் சமனில் முடிந்தது.
வெற்றியாளரை அடையாளம் காண சூப்பர் ஓவரில் பஞ்சாப்பும், டெல்லியும் விளையாடின.
கிரிக்கெட் விதிப்படி இரண்டாவதாக பேட் செய்த பஞ்சாப் அணி சூப்பர் ஓவரில் முதலாவதாக பேட் செய்தது.
டெல்லிக்காக சூப்பர் ஓவரை ரபாடா வீச வெறும் இரண்டே ரன்கள் விட்டுக்கொடுத்து கே.எல்.ராகுல் மற்றும் நிக்கோலஸ் பூரானை அவுட் செய்திருந்தார்.
சூப்பர் ஓவரில் மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும், பண்டும் களம் இறங்கினர். ஷமி வீச இரண்டே பந்துகளில் மூன்று ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.