"ஐபிஎல் இரவு போட்டிகளின் நேரத்தில் மாற்றமில்லை" சவுரவ் கங்குலி திட்டவட்டம்

"ஐபிஎல் இரவு போட்டிகளின் நேரத்தில் மாற்றமில்லை" சவுரவ் கங்குலி திட்டவட்டம்
"ஐபிஎல் இரவு போட்டிகளின் நேரத்தில் மாற்றமில்லை" சவுரவ் கங்குலி திட்டவட்டம்
Published on

இந்தாண்டு ஐபிஎல் தொடர் போட்டிகள் திட்டமிட்டப்படி மார்ச் 29 ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை இன்று சந்தித்த சவுரவ் கங்குலி " ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் மும்பையில் நடக்கும் அகமதாபாத்தில் இல்லை.
அதேபோல ஐபிஎல் இரவு ஆட்டங்களின் நேரமும் மாற்றப்படாது. இம்முறை 7.30 மணிக்கு ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது, இரவு 8 மணிக்குதான் வழக்கம் போல தொடங்கும். அதேபோல பகலிரவு போட்டிகள் 4 மணிக்கு தொடங்கும்" என்று கூறினார்.

ஹர்திக் பாண்ட்யா குறித்த கேள்விக்கு பதிலளித்த சவுரவ் " ஹர்திக் பாண்ட்யா தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனக்கு ஏற்பட்ட காயத்துக்காக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இப்போதைக்கு ஹர்திக் பாண்ட்யா முழு உடற்தகுதியுடன் இல்லை. அவர் முழு உடற்தகுதியை எட்ட தேசிய கிரிக்கெட் அகாடமி முடிவு செய்யும். மேலும் இந்திய அணிக்கு ஊட்டசத்து நிபுணரும், பயோ மெக்கானிக்கல் பவுலிங் பயிற்சியாளரும் தேவை, அதற்கான விளம்பரத்தையும் செய்துள்ளோம்" என்றார் அவர்.

முன்னதாக ஐபிஎல் போட்டிகளின் பங்குதாரர்கள் சவுரவ் கங்குலியை சந்தித்து இரவு நேர போட்டிகளின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com