ஐபிஎல் போட்டி : டெல்லி கேபிடல்ஸ்க்கு 150 ரன் வெற்றி இலக்கு

ஐபிஎல் போட்டி : டெல்லி கேபிடல்ஸ்க்கு 150 ரன் வெற்றி இலக்கு
ஐபிஎல் போட்டி : டெல்லி கேபிடல்ஸ்க்கு 150 ரன் வெற்றி இலக்கு
Published on

டெல்லி கேபிடல்ஸ்க்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 149 எடுத்துள்ளது. 

ஐபிஎல் தொடரின் 20வது போட்டியில் இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதி வருகின்றன. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக பர்தீவ் பட்டேலும் விராட் கோலியும் களமிறங்கினர். இதில் பர்தீவ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டீ வில்லியர்ஸ் 17 ரன்களிலும் ஸ்டொய்னீஸ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்ற விராட் கோலி அபாரமாக விளையாடி 33 பந்துகளில் 41 ரன்களிலும் மொய்தீன் அலி 18 பந்துகளில் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை ரபடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மோரீஸ் 2 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேலும் சந்தீப் லமீச்சனேவும் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இசான் சர்மா 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை.

ஏற்கனவே பெங்களூர் அணி 5 போட்டிகளில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசியில் உள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இன்றும் தோற்றால் அந்த மேலும் பரிதாப நிலையை அடைந்துவிடும். இருப்பினும் சொந்த மைதானம் என்பதால் அந்த அணி சற்று பலத்துடன் வெற்றியை நோக்கி செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com