காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் நடைபெறும் சில போட்டிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராத் கோலி பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்டில் பீல்டிங்கின் போது இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், தர்மசாலா டெஸ்டில் விராத் கோலி பங்கேற்கவில்லை. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காகவே விராத் கோலி தர்மசாலா டெஸ்டில் விராத் கோலி விளையாடவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. ஆஸ்திரேலிய அணியுடனான தொடர் வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோலி, காயத்திலிருந்து முழுமையாக மீள இன்னும் ஒருசில வாரங்கள் ஆகலாம் என்று தெரிவித்தார். இதனால், ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் கோலி பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் விராத் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியனான டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஏப்ரல் 5ம் தேதி நடக்கிறது.