‘இன்னும் போட்டி முடியவில்லை.. உசுப்பேற்றி மிரட்டிய ரிச்சர்ட்ஸன்’: சிலிர்க்கும் இன்சமாம் !

‘இன்னும் போட்டி முடியவில்லை.. உசுப்பேற்றி மிரட்டிய ரிச்சர்ட்ஸன்’: சிலிர்க்கும் இன்சமாம் !
‘இன்னும் போட்டி முடியவில்லை.. உசுப்பேற்றி மிரட்டிய ரிச்சர்ட்ஸன்’: சிலிர்க்கும் இன்சமாம் !
Published on

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்டஸ்க்கு இருந்த ஆக்ரோஷம் இப்போதுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இல்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் அப்போதைய கிரிக்கெட்டுக்கும் இப்போதைய கிரிக்கெட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை பகிர்ந்துக்கொண்டார், அதில் "ஒரு முறை நான் சர் விவியன் ரிச்சர்ட்ஸுடன் இணைந்து பேட்டிங் விளையாடும் வாய்ப்பினை பெற்றேன். அப்போது என்னிடம் வந்த அவர் நம் இருவரில் யார் அதிக தூரம் சிக்ஸ் அடிக்கிறார்கள் என்ற போட்டியை வைத்துக்கொள்ளலாமா என கேட்டார். அதற்கு நானும் சிரித்துக்கொண்டே நிச்சயமாக என கூறினேன். நான் அப்போது மனதில் நினைத்தேன், இவர் ஓய்வுப் பெற்ற வீரர்தானே என சாதாரணமாக எண்ணினேன்" என்றார்.

இது குறித்து மேலும் தொடர்ந்த அவர் "அடுத்த ஓவரில் ரிச்சர்ட்ஸ் சிக்ஸர் அடித்தார் அந்தப் பந்து மைதானத்தில் வெளியே இருக்கும் பார்க்கிங்கில் சென்று விழுந்தது அடுத்து நான் அடித்த சிக்ஸ் அவர் அடித்த தூரத்தையும் தாண்டி விழுந்தது. அப்போது நான் அவரிடம் சொன்னேன், உங்களை விட அதிக தூரம் அடித்துவிட்டேன் என்றேன். அதற்கு ரிச்சர்டஸ், போட்டி இன்னும் முடியவில்லை நாம் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு அடுத்தடுத்து அவர் விளாசிய சிக்ஸர்கள் மைதான்ததின் வெளியே இருக்கும் வீடுகளுக்கு சென்று விழுந்தது" என்றார் இன்சமாம்.

இப்போதுள்ள வீரர்கள் குறித்துப்பேசிய அவர் "சர்வதேசப் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்ற பின்பும் ரிச்சர்ட்ஸிடம் இருந்த பலம் என்னை பிரம்மிக்க வைத்தது. அவரிடம் இருந்து இளம் வீரர்கள் கற்க வேண்டியது அவசியம். அவரிடமிருந்த ஆக்ரோஷம் இப்போதுள்ள வீரர்களுக்கு இல்லை. டி20 போட்டிகளில் ரன்கள் குவிக்கப்பட்டாலும் ஆக்ரோஷம் குறைவாகத்தான் இருக்கிறது. போட்டிகளில் ஆக்ரோஷம் இருந்தால்தாந் மக்கள் ரசிப்பார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com