வங்‌கதேசம்- இந்தியா இடையேயான போ‌ட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்ய தருணங்கள்

வங்‌கதேசம்- இந்தியா இடையேயான போ‌ட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்ய தருணங்கள்
வங்‌கதேசம்- இந்தியா இடையேயான போ‌ட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்ய தருணங்கள்
Published on

வங்‌கதேசம்- இந்தியா இடையேயான போ‌ட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யமான தருணங்களை ‌தற்போது காணலாம்.

‌இந்திய அணி‌ வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், நான்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுடன் களம் கண்டது. தோனி‌, ரிஷப் பந்த்,
தினேஷ் கார்த்திக், கே. எல்.‌ ராகுல் ஆகிய நான்கு விக்கெட் கீப்பர்களுடன் வங்கதேசத்தை எதிர்கொண்டது இந்தியா.‌ தோனி விக்கெட்
கீப்பிங் செய்ய, மற்ற மூவரும் ஃபீல்டர்களாக செயல்பட்டனர்.

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா‌ வெற்றி பெற்றதன் மூலம், வங்கதேசம்‌ அரையிறுதிக்கு தகுதி பெறாமல் நடப்புத்
தொடரிலிருந்து வெளியேறியது. இதில் சுவாரஸ்யமான அம்சம் ஒன்று பொதிந்துள்ளது.‌ ‌கடைசியாக நடைபெற்ற 4‌ உலகக்கோப்பை
தொடர்களிலும் இந்திய அணியே வங்கதேச அணியை வீழ்த்தி தொடரிலிருந்து ‌வெளியேற்றி உள்ளது. அதாவது 20‌15 உலகக்கோப்பை,
2016 டி20 உலகக்கோப்பை, 2017 சாம்பியன்ஸ் கோப்பை, நடப்பு உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் இந்தியாவுடன் தோல்வியுற்றே
வங்கதேச அணி வெளியேறியது.‌

போட்டியில் ரோகித் சர்மா அடித்த சிக்ஸர் ஒன்று, ரசிகர் ஒருவரின் மேல் பட, அவர் காயமடைந்தார். போட்டி முடிவடைந்த பின்
ரோகித் சர்மா, அந்த ரசிகர்களை சந்திந்து நலம் விசாரித்து, தான் கையொப்பம் இட்ட தொப்பி ஒன்றை அவருக்கு ‌வழங்கினார். இந்த
நெகிழ்ச்சியாக நிகழ்வை பலரும் சுட்டிக்காட்டி ரோகித் சர்மாவை பாராட்டி வருகிறார்கள்.

போ‌ட்டியில் ரோகித் சர்மா‌, சதமடித்ததன் மூலம், தொடக்க வீரராக களமிறங்கி அதிக சதமடித்த ஐந்தாவது வீரர்‌ என்ற பெருமையையும்
அவர் தமதாக்கினார். 22 சதங்கள் சேர்த்து பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ரோகித் வகிக்கிறார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, நான்கு வீரர்களை போல்ட் செய்து அமர்களப்படுத்தினார். இதன் மூலம் இந்திய வேகப்பந்து
வீச்சாளர் ஒருவர், ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் நான்கு விக்கெட்டுகளை போல்ட் செய்து எடுப்பது இதுவே முதல் முறையாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com