சர்வதேச சிலம்ப போட்டி: தங்கம் வென்ற ஈரோடு வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

சர்வதேச சிலம்ப போட்டி: தங்கம் வென்ற ஈரோடு வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு
சர்வதேச சிலம்ப போட்டி: தங்கம் வென்ற ஈரோடு வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு
Published on

சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த விளக்கேத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதி. இவர், சிறுவயது முதலே சிலம்பம் கற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி நேபாள் நாட்டில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.

இதில், ஹாக்கி, கால்பந்து, குத்துச்சண்டை, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இந்தியாவின் சார்பில் 70 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு 42 தங்கம்,17 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் பதங்களை வென்றுள்ளனர்.

இந்தியா சார்பில் சிலம்பம் பிரிவில் பங்கேற்ற கோமதி தங்கம் வென்று ஊர் திரும்பினார். அவருக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் பயணிகள், ரயில்வே போலீசார், பொதுமக்கள் என ஏராளமானோர் பாராட்டி செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com