இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3வது மற்றும் இறுதி டி20 போட்டி பிரிஷ்டாலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வெல்லும் அணிக்கு கோப்பை என்பதால் இரு அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 198 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ராய் 67 (31), பட்லர் 34 (21), அலெக்ஸ் 30 (24), ஜானி 25 (14) ரன்கள் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களுக்கு 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கவுல் 2, உமேஷ் யதாவ் மற்றும் தீபக் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இலக்கை எதிர்த்து விளையாடிய இந்திய அணி, 18.4 ஓவர்களில் 201 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ரோகித் ஷர்மா 56 பந்துகளில் சதம் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் கோலி 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இறுதியாக வந்து விளையாடிய ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார். இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.