இந்தியாவிற்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பீட்டர் ஹண்ட்ஸ்கோம்ப் சதம் அடித்தார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4வது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 95 (92) ரன்களில் ரோகித் அவுட் ஆக, நிலைத்து விளையாடிய் தவான் 143 (115) ரன்கள் குவித்தார். அதன்பின்னர், வந்த ராகுல் 26 (31), ரிஷாப் பண்ட் 36 (24), விஜய் ஷங்கர் 26 (15) ரன்கள் சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் பட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க கேப்டன் ஆரோன் ஃபின்ச் ரன் எதுவும் எடுக்காமல் 2 பந்துகளிலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு வீரரான உஸ்மான் காவஜா நிலைத்து ஆடினார். அடுத்த வந்த ஷான் மார்ஸ் 6 (10) ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர், ஜோடி சேர்ந்த பீட்டர் ஹண்ட்ஸ்கோம்ப் மற்றும் காவஜா ஜோடி அணியின் ரன்களை 200-ஐ தாண்டி கொண்டு சென்றனர். 91 (99) ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் காவஜா அவுட் ஆனார். ஆனால் ஹண்ட்கோம்ப் சதம் அடித்தார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் 23 (13) ரன்களில் வெளியேற, 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய 230 ரன்களை கடந்து விளையாடி வருகின்றனர்.