முதல் டி20யில் இந்திய அணி பேட்டிங் - ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலி

முதல் டி20யில் இந்திய அணி பேட்டிங் - ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலி
முதல் டி20யில் இந்திய அணி பேட்டிங் - ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலி
Published on

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் இரண்டு டி20 போட்டிகளில் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடவுள்ளன. இதில் முதல் டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி டி20 கோப்பையை வெல்லமால் சமன் செய்தது. அதற்கு மழையும் ஒரு காரணம். 

இந்நிலையில், ஆஸ்திரேலியா இந்தியா வந்துள்ளதால், இந்த முறை டி20 கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா உள்ளது. அதேசமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் தோற்றதால் இந்தியாவை வென்று பதிலடி கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணி உள்ளது. 

இந்நிலையில், முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இந்திய அணியில் ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்கு பிறகு கே.எல்.ராகுலுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தோனி, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என தெரிகிறது. மயங்க் மார்க்கண்டே தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கியுள்ளார். 

போட்டி தொடங்குவதற்கு முன்பாக புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து கொண்டு விளையாடுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com