"ரோகித் சர்மாவை கேப்டனாக்கவில்லை என்றால் நஷ்டம் அவருக்கு இல்லை!"-கவுதம் காம்பீர்

"ரோகித் சர்மாவை கேப்டனாக்கவில்லை என்றால் நஷ்டம் அவருக்கு இல்லை!"-கவுதம் காம்பீர்
"ரோகித் சர்மாவை கேப்டனாக்கவில்லை என்றால் நஷ்டம் அவருக்கு இல்லை!"-கவுதம் காம்பீர்
Published on

டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கவில்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ தளத்துக்கு பேசியுள்ள கவுதம் காம்பீர் "இந்தியாவுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவில்லை என்றால் இழப்பு அவருக்கு இல்லை. ஒருவர் நல்ல கேப்டன் என்பதை எந்த அளவுகோளை வைத்து முடிவு செய்வீர்கள் ? அப்படி பார்த்தால் ரோகித் சர்மா 5 முறை ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தந்துள்ளார். தோனியை இப்போதும் மிகச் சிறந்த கேப்டன் என ஏன் நாம் சொல்கிறோம்" என்றார்.

மேலும் "தோனி இந்தியாவுக்கு 2 உலகக் கோப்பை, 1 சாம்பியன் கோப்பை பெற்றுந் தந்துள்ளார். மேலும் 3 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்றுள்ளார். அதேபோல ரோகித் சர்மா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக இருக்கிறார். அவரை இந்திய அணியின் டெஸ்ட் அல்லது டி20 அணிக்கு கேப்டனாக்கவில்லை என்றால், அதைவிட கேவலமானது எதுவும் இருக்காது" என்றார் காம்பீர்.

தொடர்ந்து பேசிய அவர் "அவரை கேப்டனாக்கவில்லை என்றால் இறுதிவரை அணியின் வெற்றிக்கு உதவும் நபராகவே இருப்பார். அதனால்தான் சொல்கிறேன் இந்திய டெஸ்ட் அணிக்கு ரோகித்தை கேப்டனாக்க வேண்டும். ரோகித் சர்மா ஏற்கெனவே தன்னுடைய கேப்டன்சி திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். அதனால் கோலி சிறந்த கேப்டன் இல்லை என கூறவில்லை. ஆனால் ரோகித் சர்மா அவரைவிடவும் திறமையாக செயல்படுவதாக நான் கருதுகிறேன்" என்றார் காம்பீர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com