இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை ஷெஃபாலி வர்மா, மகளிருக்கான பிக்பேஷ் லீக்கில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ளார். 17 வயதான அவர் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மிக இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடிய வீராங்கனை என்ற சாதனையை படைத்தவர். டி20, டெஸ்ட், ஒருநாள் என மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் அவர் விளையாடி வருகிறார்.
ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக சிட்னி சிக்ஸர்ஸ் அணி 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. இந்த சேஸிங்கில் தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய ஷெஃபாலி 50 பந்துகளில் 57 ரன்களை குவித்து அசத்தினார். அதன் மூலம் சிட்னி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதையும் ஷெஃபாலி வென்றிருந்தார்.
சிட்னி அணியில் விளையாடி வரும் மற்றொரு இந்திய வீராங்கனை ராதா யாதவ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.