மகளிர் டி20 சேலஞ்ச் தொடர்... அமீரகம் சென்ற இந்திய வீராங்கனைகள்

மகளிர் டி20 சேலஞ்ச் தொடர்... அமீரகம் சென்ற இந்திய வீராங்கனைகள்
மகளிர் டி20 சேலஞ்ச் தொடர்... அமீரகம் சென்ற இந்திய வீராங்கனைகள்
Published on

மகளிர் டி20 சேலஞ்ச் தொடரை கடந்த 2018 முதல் நடத்தி வருகிறது பிசிசிஐ.

SUPERNOVAS, TRAILBLAZERS, VELOCITY என மூன்று அணிகள் பங்கேற்கும் இந்த டி20 தொடர் வரும் நவம்பர் 4 முதல் 9ம் தேதி வரை அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடைபெற உள்ளதாக அறிவித்திருந்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.

இதனையடுத்து இந்த தொடரில் விளையாட உள்ள சுமார் 30 இந்திய வீராங்கனைகள் நேற்று விமானம் மூலம் அமீரகம் சென்றனர். அவர்கள் அனைவரும் ஆறு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர். 

அதன் பின்னர் அவர்கள் பயோ பபிலில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வீராங்கனைகளோடு இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com