டெஸ்ட் போட்டியை குறைந்த பந்துகளில் வென்று இந்திய அணி அபார சாதனை

டெஸ்ட் போட்டியை குறைந்த பந்துகளில் வென்று இந்திய அணி அபார சாதனை
டெஸ்ட் போட்டியை குறைந்த பந்துகளில் வென்று இந்திய அணி அபார சாதனை
Published on

குறைந்த பந்துகளில் வென்ற டெஸ்ட் போட்டி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஆரம்பித்த 2 நாட்களுக்குள் இரு அணிகளும் ஆல் அவுட்டாகி உள்ளன. இதுவரை மொத்தமாக 30 விக்கெட்டுகள் இந்த ஆட்டத்தில் வீழ்ந்துள்ளன. அதில் 28 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியுள்ளனர்.

இந்திய அணிக்கு 48 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 28.3 ஒவர்களில் இந்திய அணி இந்த போட்டியை வென்றால், குறைந்த பந்துகளில் இந்தியா வென்ற டெஸ்ட் போட்டியாக இது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி 7.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன் மூலம் குறைந்த பந்துகளில் டெஸ்ட் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 968 பந்துகளில் பங்களாதேஷ் அணியை இந்தியா வென்றதே சாதனை இருந்தது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 112 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 81 ரன்களும் எடுத்தது. அதேபோல இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன  நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களும் எடுத்து அபார வெற்றி பெற்றது.

 இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 2:1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com