இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷிகர் தவான் 4, கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் 5 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 23 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் நிதானமாக விளையாடி 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். ஷர்துல் தாகூர் டக் அவுட் ஆக, இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 3, அக்ஸர் படேல் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து, 125 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. அந்த அணியில் ஜோஸ் பட்லர், ஜேஸன் ராய் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 8 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 28 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ராய் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 44 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். 4 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும்.