கொரோனா அச்சுறுத்தலினால் ரசிகர்களின் வருகை இல்லாமல் மைதானங்களின் கதவுகள் அடைக்கப்பட்டு ஏழாவது ஐ.எஸ்.எல் தொடர் கோவாவில் உள்ள மூன்று மைதானங்களில் விளையாடப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 2020-21 சீசனுக்கான நடப்பு இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இன்று ஆரம்பமாகிறது.
சென்னையின் எஃப்.சி, அட்லெடிகோ டி கொல்கத்தா எஃப்.சி, பெங்களூரு எஃப்.சி, எஃப்.சி கோவா, ஹைதராபாத் எஃப்.சி, ஜேம்ஷெட்பூர் எஃப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்.சி, மும்பை சிட்டி எஃப்.சி, நார்த் ஈஸ்ட் யுனைட்டட் எஃப்.சி, ஒதிஷா எஃப்.சி, எஃப்.சி ஈஸ்ட் பெங்கால் என 11 அணிகள் இதில் விளையாடுகின்றன. தமிழக சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்களும் இந்த அணியில் இடம்பெற்று விளையாடுகின்றனர்.
இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸும், அட்லெடிகோ டி கொல்கத்தா எஃப்.சி அணியும் மோதுகின்றன. இதுவரையிலான ஆறு சீசன்களில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி மூன்று முறையும், சென்னையின் ஃஎப்.சி இரண்டு முறையும், பெங்களூரு எஃப்.சி ஒரு முறையும் சாம்பியன் பட்டம் வேண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.