கால்பந்து ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நான்காவது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று தொடங்குகிறது.
கொச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் இரு முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், சச்சினை உரிமையாளராக கொண்ட கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி இரவு எட்டு மணிக்குத் தொடங்குகிறது.
முதல் மூன்று சீசன்களில் 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் தற்போது கூடுதலாக பெங்களூரு எஃப்.சி, ஜாம்ஷெட்பூர் எஃப்.சி. அணிகள் நடப்புத் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த சீசனில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இம்முறை ஆடும் லெவனில் விளையாடும் வீரர்களின் எண்ணிக்கை 6-ல் இருந்து 5ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையின் எஃப்சி அணி வரும் 19 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் கோவா அணியை எதிர்த்து விளையாட உள்ளது.