‘ஸ்டம்பிற்கு பின்னால் தோனி இல்லை’ - தடுமாறினார்களா ஸ்பின்னர்கள்?

‘ஸ்டம்பிற்கு பின்னால் தோனி இல்லை’ - தடுமாறினார்களா ஸ்பின்னர்கள்?
‘ஸ்டம்பிற்கு பின்னால் தோனி இல்லை’ - தடுமாறினார்களா ஸ்பின்னர்கள்?
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று சமநிலையில் இருந்தன. இதனால் அதிக எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்ட ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 272 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 237 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. அத்துடன் ஒருநாள் போட்டி தொடரையும் சொந்த மண்ணில் இந்திய அணி இழந்துள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா தொடரில் இரண்டு போட்டியில் தோனி இல்லாததால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் செயல்பாடுகள் சற்றே மந்தமடைந்ததாகவே தெரிகிறது. இந்தத் தொடரில் குல்தீப் யாதவ், ஜடேஜா, கேதார் ஜாதவ் மற்றும் சஹால் சுழற்பந்துவீச்சில் ஈடுபட்டனர். முதலாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பறியிருந்தனர். அதேபோல 2வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தனர்.

மேலும் 4வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகள் மட்டுமே சாய்த்துள்ளனர். இன்று நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே கைபற்றியுள்ளனர். இந்த தரவுகளை வைத்து பார்க்கும் போது இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் தோனி விளையாடிய முதல் மூன்று போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். ஆனால் அவர் விளையாடாத கடைசி இரண்டு ஒருநாள் போட்டியில் இவர்கள் வேறும் 5 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளனர்.

இதற்கு காரணம் தோனி ஸ்டெம்பிற்கு பின்னால் இருந்து கொண்டு அடிக்கடி அறிவுரையை வழங்கி சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உரிய ஊக்கத்தை அளிப்பார். அது அவர்களை நேர்த்தியாக பந்துவீசி விக்கெட்டுகள் எடுக்க வழிவகுத்தது. கடைசி இரண்டு போட்டியில் தோனி இல்லாதது ஒரு பெரியளவில் சுழற்பந்து வீச்சாளர்களின் செயல்பாடுகள் காட்டுகின்றன. அத்துடன் தோனி அவரது துள்ளியமான விக்கெட் கீப்பிங்கின் மூலம் முக்கிய நேரத்தில் கிடைக்கும் ஸ்டெம்பிங் வாய்ப்புகளையும் தவறவிடாமல் நேர்த்தியாக செய்திருப்பார்.

இதனால் கடந்தப் போட்டியில் ரிஷப் பந்த் ஸ்டெம்பிங் தவறவிட்டவுடன் ரசிகர் மைத்தானத்தில் தோனி வேண்டும் என்று கூக்குரல் ஈட்டனர். அது அந்த ஸ்டெம்பிங்கிற்காக மட்டும் இல்லை மொத்த இந்திய அணியின் விளையாட்டையும் மெருகேற்றுவதற்காகவும் தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com