”36 வயதாகிறது; இனி ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்காது"- காத்திருந்து ஓய்வு பெற்றார் இந்திய வீரர்!

”36 வயதாகிறது; இனி ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்காது"- காத்திருந்து ஓய்வு பெற்றார் இந்திய வீரர்!
”36 வயதாகிறது; இனி ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்காது"- காத்திருந்து ஓய்வு பெற்றார் இந்திய வீரர்!
Published on

2011-12ஆம் ஆண்டில் இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ராபின் பிஸ்ட், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

2011-12ஆம் ஆண்டில் இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர், ராபின் பிஸ்ட். தனது கிரிக்கெட் வாழ்க்கையை டெல்லியிலிருந்து தொடங்கிய ராபின், பின்னர் ராஜஸ்தானுக்குப் பயணமானார். அங்கு கிரிக்கெட்டில் பட்டையைக் கிளப்ப முதல் தர கிரிக்கெட்டில் இடம்பெற்றார். 2007-08ஆம் ஆண்டு முதல் தர போட்டியில் அறிமுகமான அவர், அந்த சீசனில் ராஜஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதம் அடித்து நட்சத்திர வீரரானார். அதைத் தொடர்ந்து 2011-12ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சிக்கோப்பையில் 1000 ரன்களைத் தாண்டி 86.16 சராசரியைப் பெற்றிருந்தபோது வெளிச்சத்திற்கு வந்தார்.

அந்த சீசனில் ஆகாஷ் சோப்ரா தலைமையிலான ராஜஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் ராபின் 57 மற்றும் 92 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம் ராபின், இந்தியா ஏ அணியில் இடம்பிடித்தார். மேலும், 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனும் இணைந்து விளையாடினார். தவிர, இமாச்சல் பிரதேசம், சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

இந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து தாம் ஓய்வுபெறுவதாக ராபின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”எனக்கு 36 வயதாகிறது. இனி, எனக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்காது. தவிர, இந்தியாவுக்காகவும் விளையாட மாட்டேன் என்று எனக்குத் தெரியும். எனவே நான் அதைப் பற்றி நன்கு யோசித்துவிட்டுத்தான் இத்தகைய முடிவை எடுத்துள்ளேன். இத்தனை நாள் கிரிக்கெட் விளையாண்டதற்கு நன்றி. 10-15 வருடங்கள் இடைவிடாமல் கிரிக்கெட் விளையாடும்போது நம்முடைய குடும்ப வாழ்க்கையை இழக்க நேரிடும். கடந்தகாலங்களில் நான், மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்தேன். இனி, குடும்பத்துடன் என் நாட்களைச் செலவிடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com