மனைவி புகார் விவகாரம் : ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மனைவி புகார் விவகாரம் : ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
மனைவி புகார் விவகாரம் : ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது கொல்கத்தா காவல்துறையினர் பாலியல் கொடுமை மற்றும் வரதட்சணை ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். ஆனால் ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த ஆண்டு முன்வைத்தார். அதில், ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுதொடர்பான சில தகவல்களை ஹசின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அத்துடன் கொல்காத்தா காவல்நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை ஷமி மறுத்திருந்தார்.

அதன்பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இருப்பினும் ஷமி மீது என்ன வழக்குக்கள் பதிவு செய்துள்ளனர் என்பது தங்களிடம் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை என ஹசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஷமி மீதான வழக்கு தொடர்பாக காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 

அதில், குடும்பத்தகராறு மற்றும் பாலியல் கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகை அலிபூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ஷமி தரப்பிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதனை சட்டப்படி சந்திப்போம் என ஷமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

குற்றப்பத்திரிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் முகமது ஷமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உலகக்கோப்பை நெருங்கி விட்ட நிலையில், ஷமி மீது தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிக்கை என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

ஏற்கனவே, ஷமி மீது அவரது மனைவி இரண்டு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து இருந்தார். அதில் ஊழல் குற்றச்சாட்டில் பிசிசிஐ நடவடிக்கை எடுத்து இருந்தது. இருப்பினும், குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஷமி மீதான நடவடிக்கையை பிசிசிஐ வாபஸ் பெற்றது.     

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com