கடந்த 2011இல் இதே நாளன்று புதிய வரலாற்றை படைத்திருந்தது தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா வென்றது தான் அந்த வரலாறு. இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணி உள்நாட்டில் உலக கோப்பை தொடரில் பங்கேற்றது. கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றாகவும் இந்தியா இருந்தது.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலேயே அமைந்தது இந்திய அணியின் ஆட்டம். இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்று காட்டியது. அதற்கு முன்னதாக கபில் தேவ் உலக கோப்பை வென்றிருந்தார்.
யுவராஜ், சச்சின், தோனி, ஜாகிர் கான், கம்பீர் என பல மேட்ச் வின்னர்களை கொண்டிருந்தது இந்திய அணி.
இந்நிலையில் பத்து ஆண்டு நினைவுகளை சமூக வலைத்தள பதிவுகள் மூலம் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளனர் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும். அதில் சில ரியாக்ஷன்கள் இங்கே...
கோலி தலைமையிலான இந்திய அணி வரும் 2023 உலக கோப்பயை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.