பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கலந்துகொள்ளாது; போட்டியை வேறிடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்திருக்கும் நிலையில், தற்போது இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்காது என தேசிய கூட்டமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நவம்பர் 23 முதல் டிசம்பர் 3 வரை பார்வையற்றோ T20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்திய பார்வையற்ற கிரிக்கெட் அணி, மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருந்தது.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல அரசு அனுமதி மறுத்துள்ளதால் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்காது என தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
2012, 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளின் மூன்று பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையையும் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்தப் போட்டிகளும் வேறு நாடுகளுக்கு மாற்றி வைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.